விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த எண்ணற்ற திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்துகிறது

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த எண்ணற்ற திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்துகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.;

Update: 2018-06-23 22:45 GMT
உப்பிடமங்கலம்,

கிருஷ்ணராயபுரம் தொகுதி சார்பில் உப்பிடமங்கலத்தில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணன் தலைமை தாங்கினார். தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் வேலுசாமி முன்னிலை வகித்தார். தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆலம் தங்கராசு வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், தலைமை கழக பேச்சாளர் கோவை கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா என்னென்ன திட்டங்களை செயல்படுத்தினாரோ அதற்கு நிகராக நல்ல திட்டங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் செயல்படுத்தி வருகிறார்கள். கருணாநிதி ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்காமல் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.

ஜெயலலிதா உச்சநீதிமன்றம் சென்று நீதியை நிலை நாட்டினார். காவிரி நதிநீருக்காக மெரினா கடற்கரையில் 80 மணி நேரம் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அ.தி.மு.க. ஒரு கோடியே 54 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட கட்சி. மேலும் உணவு உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் முன்னிலையில் உள்ளது. சம்பா உற்பத்திக்கு மத்திய அரசு ரூ.41 கோடி வழங்கி உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த எண்ணற்ற திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும், கழக செய்தி தொடர்பாளருமான வைகைசெல்வன் பேசினார்.

இந்த கூட்டத்தில் பொரணி கணேசன், உப்பிடமங்கலம் பேரூர் அவைத்தலைவர் அழகப்பன், கரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகப்பன், மாவட்ட துணை செயலாளர் சித்ரா மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உப்பிடமங்கலம் பேரூர் செயலாளர் ஆர்.பழனிசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்