தமிழகம் முழுவதும் வருகிற 27–ந் தேதி முதல் கோவில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தமிழகம் முழுவதும் கோவில் பணியாளர்கள் வருகிற 27–ந் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு திருக்கோவில் முதுநிலை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜீவானந்தம் கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட திருக்கோவில் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு திருக்கோவில் முதுநிலை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கி பேசினார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரசிடம் 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. அதாவது 7–வது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும். பணிக்கொடை, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6–ந் தேதி நெல்லை இணை ஆணையர் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு நடந்தது. மேலும் 21–ந் தேதி சென்னை ஆணையர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்பட்டது.
எனினும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அடுத்தகட்டமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் வருகிற 27–ந் தேதி தொடங்கும். இந்த போராட்டத்தில் அனைத்து சங்கங்களும் பங்கேற்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றில் அர்ச்சகர்களையும் சேர்த்து சுமார் 20 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர்.
உள்ளிருப்பு போராட்டம் காரணமாக இவர்கள் அனைவரும் பணிக்கு செல்ல மாட்டார்கள். இதனால் கோவில்களில் அர்ச்சனைகள் செய்யப்பட மாட்டாது. மேலும் வழிபாட்டு கட்டணம் வசூலிப்பது, அன்னதானம், சிறப்பு தரிசனம் உள்ளிட்டவை நடைபெறாது. ஆனால் பூஜைகள் தடைபடாது. பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் எங்களது போராட்டம் நடைபெறும். குமரி மாவட்டத்தில் இந்த போராட்டத்தில் சுமார் 450 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.