8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினர்.
அப்போது, 8 வழி பசுமை சாலை அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என சில விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து பேசினர். மேலும், விவசாய நிலங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் சிலர் கூறினர். இதையடுத்து விவசாயிகளை அதிகாரிகள் சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால் அதை கேட்காத நரிகல்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர், 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் கூறியதாவது:-
சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே 2 வழிகளில் சாலை உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது 8 வழி பசுமை சாலை திட்டம் தேவையா?. ஏற்கனவே 4 வழி சாலை மற்றும் ரெயில்வே திட்டத்திற்காக ஏராளமான விளை நிலங்களை ஒப்படைத்துள்ளோம். தற்போது விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எங்களது முன்னோர்கள் காலம் காலமாக விவசாயம் செய்து வந்த நிலத்தை நாங்கள் கொடுக்க தயாராக இல்லை.
பசுமை சாலை அமைக்க 90 சதவீதம் பேர் ஒத்துழைப்பு கொடுப்பதாக மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறியிருக்கிறார். அது முற்றிலும் பொய். அனைத்து விவசாயிகளும் இந்த திட்டம் தேவையில்லை என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் நிலத்தை அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை விவசாயிகளும், பெண்களும் கட்டி பிடித்து கதறி அழுதார்கள். பசுமையை அழித்துவிட்டு பசுமை சாலை வேண்டாம். விவசாயிகளின் உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.