ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயர் சூட்டுவதில் தவறு இல்லை மந்திரி ஜமீர்அகமதுகான் பேட்டி

ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயரை சூட்டுவதில் தவறு இல்லை என்று மந்திரி ஜமீர்அகமதுகான் கூற

Update: 2018-06-22 22:00 GMT

பெங்களூரு, 

ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயரை சூட்டுவதில் தவறு இல்லை என்று மந்திரி ஜமீர்அகமதுகான் கூறினார்.

உணவு, பொதுவிநியோகத்துறை, ஹஜ், சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஜமீர்அகமதுகான் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

திப்பு சுல்தான் பெயர்

முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா ஹஜ் பவன் கட்டிடத்தை பெங்களூருவில் தொடங்கி வைத்தார். முஸ்லிம் மதகுருக்கள், ஹஜ் பவன் என்ற பெயரை மாற்றிவிட்டு திப்பு சுல்தான் பவன் என்று பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்–மந்திரியுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். ஹஜ் பவன் முஸ்லிம் சமூகத்திற்கு சேர்ந்தது. அது அரசு கட்டிடம் இல்லை. அது முஸ்லிம் மக்களின் ஆன்மிக கட்டிடம் ஆகும்.

சில காரணங்களால் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா நடத்துவதில் பிரச்சினை உண்டானது. ஆனால் ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயரை சூட்டினால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். இதனால் ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயர் சூட்டுவதில் தவறு இல்லை. அது முஸ்லிம் மதத்திற்கு சேர்ந்த இடம். அது அரசு கட்டிடமாக இருந்து திப்பு சுல்தான் பெயரை சூட்டினால் பிரச்சினை கிளம்பும்.

இவ்வாறு ஜமீர்அகமதுகான் கூறினார்.

பா.ஜனதா எதிர்ப்பு

ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயரை சூட்டுவது குறித்த மந்திரியின் கருத்துக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று ஷோபா எம்.பி. அறிவித்துள்ளார். மேலும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை நடத்தியவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து காணாமல் போய்விட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்