மருத்துவ மாணவர்கள் மனிதநேயத்துடன் சேவையாற்ற வேண்டும் போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் பேச்சு

மருத்துவ மாணவர்கள் மனித நேயத்துடன் சேவையாற்ற வேண்டும் என தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் கூறினார்.

Update: 2018-06-22 22:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியின் நிறைவு விழாவிற்கு மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி.

லோகநாதன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மருத்துவத்துறையும், காவல்துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும். மருத்துவத்துறையின் கடமை, சட்டங்கள் குறித்து மருத்துவ மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவ மாணவர்கள் மக்களுக்கு மனிதநேயத்துடன் சேவையாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், துணை கண்காணிப்பாளர் கண்ணன், துணை முதல்வர் ராஜா, நிலைய மருத்துவ அலுவலர் அப்துல் ஹமீது அன்சாரி, டாக்டர்கள் உதயசிங், மாணவர் சங்க செயலாளர் குறிஞ்சி வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்