ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-06-22 21:45 GMT

புதுச்சேரி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், பொதுமக்கள் 13 பேரை படுகொலை செய்த தமிழக அரசின் ஒடுக்குமுறையை கண்டித்தும், வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தக்கோரியும் போராட்டங்கள் நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி புதுவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு அமுதவன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தமிழ்மாறன், செல்வநந்தன், அகன், பொதினிவளவன், முன்னவன், ஆதவன், சுடர்வளவன், கார்முகில், எழில்மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்