வால்பாறை பகுதியில் தொடர்மழை: சோலையார் அணை நீர்மட்டம் மேலும் உயர்வு
வால்பாறை பகுதியில் தொடர்மழை பெய்துவருவதால் சோலையார் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வால்பாறை,
வால்பாறை வட்டார பகுதி மற்றும் கேரள வனப்பகுதிகளில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்துவருகிறது. இதனால் வால்பாறை ஆறுகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சோலையார் அணைக்கு தண்ணீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வால்பாறை தாலுகா பகுதியில் கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழையால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 147 அடியை எட்டியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தொடர்ந்து ஆறுகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சோலையார்அணையின் அணையின் நீர்மட்டம் 147.75 அடியை எட்டியுள்ளது.
வால்பாறை பகுதியில் தொடரும் மழை காரணமாகவும், சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு வருவதாலும், சோலையார் அணையிலிருந்து மானம்பள்ளி வழியாக மின் உற்பத்தி செய்யப்படாமல் மாற்றுப்பாதை வழியாக தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த மழைகாரணமாக வெள்ளமலை டனல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வால்பாறை பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் சோலையார் அணையில் 48 மி.மீ. மழையும், வால்பாறையில் 19 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 38 மி.மீ. மழையும், நீராரில் 29 மி.மீ. மழையும் பெய்துள்ளது. சோலையார்அணைக்கு விநாடிக்கு 2438 கனஅடித்தண்ணீர் வந்து வந்துகொண்டிருக்கிறது.சோலையார்அணையிலிருந்து மாற்றுப்பாதை வழியாக பரம்பிக்குளம்அணைக்கு 929 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. சோலையார்அணையின் நீர்மட்டம் 147.75 அடியாக இருந்து வருகிறது.