தீங்கு விளைவிக்கும் உணவுப்பொருட்கள் விற்பனையை தடைசெய்ய வேண்டும்
பள்ளி வளாகங்களில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவு பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டு உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் சார்பில் கலெக்டர் நடராஜன் தலைமையில் உணவு பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:- உணவுப்பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் அறிவுறுத்தியுள்ளபடி பொதுமக்கள் நலனை பாதுகாத்திடும் வகையில் உணவுப்பொருட்களின் தர நிர்ணயம் செய்வது, தரமான பொருட்களின் விற்பனையினை கண்காணித்து உறுதி செய்வது போன்றவை உணவு பாதுகாப்பு துறை சார்ந்த அலுவலர்களின் கடமையாகும்.
அந்தவகையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் உள்ள கேன்டீன்கள் அனைத்தும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். பள்ளி வளாகம் அருகே குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவு பொருட்கள், தடை செய்யப்பட்ட உணவு பொருட்களான பான் மசாலா, குட்கா, குறியிடப்படாத சாக்லேட்டுகள், நொறுக்குத்தீனிகள் போன்ற பொருட்கள் விற்பனையை அதிகாரிகள் தடை செய்ய வேண்டும்.
இது தொடர்பாக பள்ளியில் பொறுப்பு அலுவலர்கள் நியமித்து முறையாக கண்காணிக்க வேண்டும். இதேபோல மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் கீழ் இயங்கி வரும் அரசு மாணவ, மாணவிகள் விடுதிகளில் உள்ள உணவு விடுதிகளையும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் உணவக உரிமையாளர்கள் தங்களது உணவகங்களில் சமையலுக்கு சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். உணவுப்பொருட்களில் அதிகப்படியாக நிறமிகள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். பூச்சிகள், ஈக்கள் போன்றவை உணவு பொருட்களை தீண்டாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொழில்வர்த்தக கழகங்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் மொத்த, சில்லறை விற்பனை உணவு பொருட்கள் அனைத்திலும் உற்பத்தி நாள், காலாவதி நாள், உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட்ட விவரம் ஆகியவற்றை அச்சிட்டு விற்பனை செய்ய வேண்டும். இதேபோல பால் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசு பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க ஏதுவாக 94440 42322 என்ற வாட்ஸ்- அப் எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள், கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் இந்த வாட்ஸ் அப் எண்ணில் புகார்களை புகைப்படத்துடன் தெரிவிக்கலாம். இத்தகைய புகார்கள் மீது சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி, ஆவின் பொது மேலாளர் ராஜாராம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் உள்பட அரசு அலுவலர்கள், உணவு விடுதி உரிமையாளர்கள் சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், வர்த்தக சங்கம் ஆகிய சங்கங்களை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.