உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் சர்வதேச யோகா தின விழா: போலீஸ் ஐ.ஜி. பாரி பேச்சு
பிறந்த நோக்கத்தை அடைய மனிதனுக்கு யோகா அவசியம் என்று உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் திருப்பூரில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி பேசினார்.
திருப்பூர்,
திருப்பூர் மண்டல உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் அனைத்து மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகள் சார்பில் சர்வதேச யோகா தின விழா திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று காலை நடைபெற்றது. உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவரும், ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனருமான நாகராஜன் கொடியேற்றி விழாவை தொடங்கிவைத்தார். டாக்டர் சீனியம்மாள் இறைவணக்கம், குருவணக்கம் பாடினார்.
திருப்பூர் மண்டல தலைவர் கந்தசாமி வரவேற்றார். உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவரும், ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிர்வாக இயக்குனருமான ஆறுமுகம் தலைமை தாங்கி பேசினார். ஆழியாறு அறிவுத்திருக்கோவில் அறங்காவலரும், ஸ்கை குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான சுந்தரராஜ் யோகா பயிற்சியை தொடங்கிவைத்தார். விழாவில் மனவளக்கலை யோகா கைப்பயிற்சி, தசைநார் மூச்சுப்பயிற்சி, கண் பயிற்சி, சூரிய நமஸ்காரம், தாடாசனம், ஏகபாதாசனம், சக்கராசனம், திரிகோணாசனம், பத்மாசனம், வஜ்ராசனம், முத்திரைகள், நாடிசுத்தி மற்றும் தியானம் ஆகியவற்றின் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. ஸ்கை யோகா ஆசிரியர்கள், விஷன் மாணவர்கள், பொதுமக்கள் யோகா செய்தனர்.
பின்னர் விழாவில் கலந்துகொண்ட மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி பேசியதாவது:-
மனிதன் மாமனிதனாக, புனிதனாக மாறுவதற்கு அடிப்படையாக விளங்குவது யோகா ஆகும். இறைநிலையை உணருவதே பிறப்பின் நோக்கம். மனிதன் தான் பிறந்த பலனை அடைவதற்கு யோகா உதவும். ஒழுக்கமுடைய மனிதனே தேசத்தின் மிகப்பெரிய சொத்தாகும். யோகா ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும். பிறந்த நோக்கத்தை அடைய மனிதனுக்கு யோகா அவசியம். உடல் அசைந்தாலும் மனதை அசையாமல் இயக்குவது யோகா.
மனதை அடக்க கற்றுக்கொண்டவன் மானிடத்தை வென்றவன் என்று வள்ளலார் கூறியுள்ளார். யோகா மூலமாக மனதை கட்டுப்படுத்தினால் உயர்ந்த நிலையை அடைய முடியும். வாழ்வின் நோக்கம் நிறைவேற யோகா பயிற்சி முக்கியம். மனதை அடக்கும் கலையை கற்றுக்கொண்டவனுக்கு வாழ்க்கை வசப்படும். மற்றவர்களின் வாழ்வு உயர வழிவகை செய்வதை வைத்துத்தான் ஒருவருடைய வாழ்வின் வெற்றி அளவிடப்படும். மனித சக்தியை உணர வைப்பது யோகா ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து பாண்டியன் நகரை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி திவ்யஸ்ரீ விழா மேடையில் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டி அனைவரையும் அசத்தி னார். அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. முடிவில் திருப்பூர் மண்டல உலக சமுதாய சேவா சங்க செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் யோகமும் இளைஞர் வல்லமையும் கல்வி பிரிவினர் சார்பில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதுபோல் திருப்பூர் மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் திரளான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.