பல்வேறு பள்ளிகளில் சர்வதேச யோகா தினவிழா
தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், மூலனூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நேற்று சர்வதேச யோகா தினவிழா கொண்டாடப்பட்டது.
தாராபுரம்,
நாடு முழுவதும் நேற்று சர்வதேச யோகா தினவிழா கொண்டாடப்பட்டது. அதன்படி வெள்ளகோவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு கூட்டு யோகா பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சக்திவடிவேல் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் கருணாகரன் முன்னிலைவகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கூட்டாக யோகா பயிற்சி செய்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் காடாசனம், பாதஹஸ்டாசனம், அர்த்தசக்ராசனம், அர்த்தகடிசக்ராசனம், உக்கடாசனம், வஜ்ராசனம், சூரியநமஸ்காரம் போன்ற பல்வேறு யோகா பயிற்சிகளை அனைவரும் செய்தனர். முன்னதாக பள்ளி முதல்வர் சுப்பிரமணி அனைவரையும் வரவேற்றார். பள்ளி யோகா ஆசிரியர் முருகேசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இதுபோல் தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டு யோகா பயிற்சியில் தேசிய மாணவர் படையினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு யோகா பயிற்சிகளை செய்தனர். காங்கேயம் சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி மற்றும் சூரிய நமஸ்காரம் செய்தனர்.
பள்ளி தலைவர் கோபால், தாளாளர் பழனிசாமி, பொருளாளர் மோகனசுந்தரம், முதல்வர் சாவித்திரி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் யோகா ஆசிரியை புவனேஸ்வரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் மகாதேவி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.பிரசாத் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த கூட்டு யோகா பயிற்சிக்கு பள்ளி தாளாளர் செல்லமுத்து தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர்கள் முருகேசன், அர்ஜுனன், சண்முகம் ஆகியோர் செயல்முறை விளக்கத்துடன் யோகா செய்வதன் முக்கியத்துவம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை செய்தனர். பள்ளி முதல்வர் பழனிச்சாமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மூலனூர் வஞ்சியம்மன் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் பிரதீப்முத்துக்குமார் தலைமை தாங்கினார். பயிற்சியாளர் நவீனா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சியின் சிறப்புகள் குறித்தும், இதை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் எடுத்துக்கூறினார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.