கடற்கரை சாலையில் 3 ஆயிரம் பேருடன் மத்திய மந்திரி யோகா பயிற்சி
புதுவை கடற்கரை சாலையில் 3 ஆயிரம் பேருடன் மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி யோகா பயிற்சி செய்தார். இதில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமியும் பங்கேற்றனர்.;
புதுச்சேரி,
4-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுவை கடற்கரை சாலையில் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்ட பெருந்திரள் யோகா பயிற்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார். மத்திய உணவு பதனிடும் தொழில்கள் அமைச்சக இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார். அவருடன் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது.
யோகா பயிற்சி உடலை கட்டுப்கோப்பாக வைத்துக்கொள்ள ஏதுவாக உள்ளது. யோகா பயிற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரி பள்ளிகளில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. யோகா பயிற்சியை முழுமையாக அளிப்பதற்கு யோகா ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறும்போது, புதுவை பள்ளிகளில் தினமும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக அரை மணி நேரம் யோகா வகுப்பு நடத்துவதற்கு தேவையான நிதியுதவியை சுற்றுலாத்துறை அளிக்க தயாராக உள்ளது. இதற்கான ஒப்புதல் சட்டசபை கூட்டத்தில் பெறப்படும். மாணவர்களுக்கான யோகா வகுப்புகள் கல்வித்துறையுடன் இணைந்து சுற்றுலாத்துறையினால் நடத்தப்படும் என்றார். முன்னதாக கவர்னர் மாளிகையில் நடந்த யோகா பயிற்சியில் மத்திய இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். புதுவை சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஈஷா யோகா மையம் சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டார்.
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நடந்த யோகா தொடர்பான தேசிய கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறையை மத்திய இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி, ஜிப்மர் இயக்குனர் விவேகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி பட்டறையில் நாடு முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
லாஸ்பேட்டை தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தலைமையக பயிற்சி மைதானத்தில் நடந்த யோகா தின நிகழ்ச்சிக்கு தலைமையக தலைமை அதிகாரி கர்னல் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். என்.சி.சி. மாணவர்கள் பல்வேறு யோகா பயிற்சியை செய்தனர். இதில் லெப்டினட் கர்னல் மோகித்பூரி மற்றும் கப்பல் படை, விமான படை என்.சி.சி. அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 121 பெண்கள் பங்கேற்ற 36 மணி நேர தொடர் யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை முயற்சியாக புதுவை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு தொடர் யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு நினைவுப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். முடிவில் ராகவேந்திரா ரிஷி நன்றி கூறினார்.