அந்தியூர் அருகே உரிமம் இல்லாமல் கைத்துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது
அந்தியூர் அருகே உரிமம் இல்லாமல் கைத்துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 6 தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.;
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 32). விவசாயி. இவர் உரிமம் இல்லாமல் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர், கணபதி வீட்டில் சோதனை நடத்தும்படி அந்தியூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை குரும்பபாளையத்தில் உள்ள கணபதி வீட்டுக்கு சென்றனர். போலீசார் திடீரென தன்னுடைய வீட்டுக்கு வந்ததை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவருடைய வீட்டில் ஒரு கைத்துப்பாக்கி, 6 தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அவர் அந்த கைத்துப்பாக்கியை உரிமம் பெறாமல் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து கணபதியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி, 6 தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரை போலீசார் பவானி கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாலிபர் வீட்டில் இருந்து கைத்துப்பாக்கி, 6 தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.