அனைத்து மாவட்டங்களுக்கும் இடமாறுதல் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்து மாவட்டங் களுக்கும் இடமாறுதல் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-06-21 21:37 GMT
திண்டுக்கல்,

அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், தங்களது சொந்த மாவட்டத்துக்கு மாறுதலாகி சென்றுவிடலாம் என்று காத்திருந்தனர்.

ஆனால், கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாக அறிவிப்பு பலகையில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 8 மாவட்டங் களில் ஏராளமான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

எனவே, மாணவர்களின் நலன் கருதி மற்ற மாவட்டங் களில் இருந்து இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டுமே இடமாறுதல் வழங்கப் படும். மேலும், இந்த மாவட்டங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு மாறுதல் வழங்கப்படாது. ஆனால், மனமொத்த மாறுதல்கள் அனைத்து மாவட்டங்களுக் கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்த ஆசிரியர் கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கலந்தாய்வு நடைபெறும் பள்ளி வளாகத்திலேயே இடைநிலை ஆசிரியர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனைத்து மாவட்டங்களுக் கும் மாறுதல் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். சிறிதுநேரம் கழித்து ஆசிரியர்கள் தாமாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாசிடம் கேட்டபோது, கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்போதே மேற்கண்ட 8 மாவட்டங்களுக்கு மட்டுமே மாறுதல் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும் என்றார்.

மேலும் செய்திகள்