டெங்கு காய்ச்சல் ஒழிப்பு உறுதிமொழி
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் உறுதிமொழி நிகழ்ச்சி பெரிய காஞ்சீபுரத்தில் நடந்தது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் நகராட்சி சார்பில், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நகராட்சி ஆணையர் சர்தார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அதையொட்டி காஞ்சீபுரம் நகராட்சி சார்பில், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் உறுதிமொழி நிகழ்ச்சி பெரிய காஞ்சீபுரத்தில் நடந்தது.
மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது தலைமையில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு உறுதிமொழியை நகராட்சி ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் எடுத்து கொண்டனர். இதில், நகராட்சி ஆணையர் சர்தார், நகர்நல அலுவலர் டாக்டர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.