முன்விரோதம் காரணமாக வக்கீல் குமாஸ்தா மீது தாக்குதல் 2 வாலிபர்கள் கைது
தஞ்சையில் முன்விரோதம் காரணமாக வக்கீல் குமாஸ்தாவை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;
தஞ்சாவூர்,
தஞ்சை கூடலூர் சின்னதெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 65). தஞ்சையில் வக்கீல் குமாஸ்தாவாக வேலை செய்துவருகிறார். இவர் மீதும் இவருடைய மகன் ஜெயக்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது கூடலூர் பெரிய தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் (64) கொலை வழக்கு தஞ்சை கிழக்கு போலீசில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜன் மகன் விஸ்வநாத்துக்கும், ஜெயராமன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது.
சம்பவத்தன்று ஜெயராமன், தஞ்சை கொடிமரத்துமூலை பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்குவந்த விஸ்வநாத் மற்றும் அவருடைய நண்பர்கள் ஜெயராமனிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் டீக்கடையில் வடை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சமையல் கரண்டியால் ஜெயராமனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஜெயராமன் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 வாலிபர்கள் கைது
இதுகுறித்து ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் விஸ்வநாத் (29), பிரகாஷ் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கூடலூர் பெரியதெருவை சேர்ந்த சேர்ந்த கோபி என்கிற வெள்ளை கோபி, ஜீவா ஆகியோர் மீது தஞ்சை நகர கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.