கும்மிடிப்பூண்டியில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் மர்மநபர்கள் 2 பேர் பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள முனுசாமி நகரில் வசித்து வருபவர் கலியமூர்த்தி (வயது 45). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மாலதி (40). நேற்று இரவு மாலதி அருகே உள்ள பெரியார் நகருக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி நடந்து வந்தார்.
வீட்டின் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் மாலதியிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். சங்கிலியை பறிக்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மாலதி காயம் அடைந்தார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.