பொன்னேரியில் இன்று மின்தடை
பொன்னேரி துணை மின் நிலையத்தில் இன்று மின்வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
பொன்னேரி,
பொன்னேரி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
ஆகவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொன்னேரி, தடப்பெரும்பாக்கம், வெள்ளோடை, வைரவன்குப்பம், ஏலியம்பேடு, ஆலாடு, இலவம்பேடு, உத்தண்டிகண்டிகை, வெள்ளகுளம், அனுப்பம்பட்டு, தேவதானம் பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுவதாக பொன்னேரி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.