அகஸ்தீஸ்வரம்-தோவாளை தாலுகாக்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு
அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாக்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் மாறுதல் பெற்ற 37 பேருக்கு கோட்டாட்சியர் ஜானகி ஆணைகளை வழங்கினார்.
நாகர்கோவில்,
தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலகங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் நகர பஞ்சாயத்து பகுதிகளாக இருப்பின் ஒரு ஆண்டும், கிராம பஞ்சாயத்து பகுதிகளாக இருப்பின் 3 ஆண்டுகள் நிறைவடைந்ததும் இடமாறுதல் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு இடமாறுதல் செய்யும் போது கலந்தாய்வு நடத்தி இடமாறுதல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதிகளைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கான விருப்ப மாறுதல் கலந்தாய்வு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. நேற்று அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகா பகுதிகளைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மொத்தம் உள்ள 43 கிராம நிர்வாக அலுவலகங்களில் 39 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். தோவாளை தாலுகாவில் மொத்தம் 26 கிராம நிர்வாக அலுவலகங்களில் 18 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணிக்காலம் முடிந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், விருப்பம் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்குமான விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடந்தது. இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
கலந்தாய்வு கோட்டாட்சியர் ஜானகி தலைமையில், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வினோத், தாசில்தார்கள் சஜித் (அகஸ்தீஸ்வரம்), சுரேஷ்குமார் (தோவாளை) ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது. இதில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவைச் சேர்ந்த 26 பேரும், தோவாளை தாலுகாவைச் சேர்ந்த 11 பேரும் ஆக மொத்தம் 37 பேர் மாறுதல் உத்தரவை பெற்றனர்.
இதற்கான ஆணைகளை கோட்டாட்சியர் ஜானகி வழங்கினார்.