“ராகுல்காந்தி-கமல்ஹாசன் சந்திப்பு பழைய புத்தகத்தை புரட்டுவது போன்றது” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
ராகுல்காந்தி-கமல்ஹாசன் சந்திப்பு என்பது பழைய புத்தகத்தை புரட்டிப்பார்ப்பது போன்றுதான் என்றும், அதனால் எந்த பயனும் ஏற்பட்டுவிடாது எனவும் நாகர்கோவிலில் அளித்த பேட்டியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்,
உலக யோகா தினத்தையொட்டி ஈஷா யோகா மையம் சார்பில் நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
கல்லூரி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து யோகாசனங்கள் செய்தார். நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு யோகா கலையும், அதன் பலனும் உலக நாடுகள் முழுவதும் பரவியது. யோகா மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. இது மனதிற்கும், உடலுக்கும் தெம்பு தரும் பயிற்சி ஆகும். யோகா பயிற்சியின் மூலம் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழலாம்.
இந்தியாவில் சித்தர்களும், ரிஷிகளும் மேற்கொண்ட இந்த பயிற்சி இன்று உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பெருமை சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது.
கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பட வேண்டுமானால் நாட்டு மக்களின் ஆரோக்கியம் முக்கியம். அதனை யோகா பயிற்சி நமக்கு தருகிறது. உலகில் உள்ள 170 நாடுகளில் யோகா பயிற்சி நடந்து வருகிறது.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த யோகேந்திரன், கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை, கமல்ஹாசன் சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பு பழைய புத்தகத்தை புரட்டிப்பார்ப்பது போன்றது. புத்தகத்தை எழுதியவர்களாலேயே புறந்தள்ளப்பட்ட புத்தகத்தை கையில் எடுத்து வைத்து என்ன நடக்கப்போகிறது? இந்த சந்திப்பால் எந்த பயனும் ஏற்பட்டுவிடாது.
தமிழகத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இயற்கை வளங்களை அழிப்பதில் பா.ஜனதா கட்சிக்கும், எனக்கும் எந்த உடன்பாடும் இல்லை. தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு அணைகள், விவசாய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. வளர்ச்சி அடைய சிலவற்றை தியாகம் செய்தால்தான் முடியும். இங்குள்ள அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துகிறார்கள்.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே நான் கூறினேன். ஆனால் அப்போது அரசும், தமிழக உளவுத்துறையும் அதனை மறுத்தது. இப்போது மத்திய உளவுத்துறை மூலம் தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. பயங்கரவாதிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காதது ஏன்?
குமரி மாவட்டத்தில் துறைமுகம் வந்தாக வேண்டும். அதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். துறைமுகம் அமையவில்லை என்றால் அது குமரி மாவட்ட மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் குமரி மாவட்ட மக்கள் மீதும், அவர்களின் வளர்ச்சியின் மீதும் அக்கறை இல்லாதவர்கள்.
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகம் அமைக்கும் திட்டத்துக்கு அப்போதே ஆதரவு தெரிவித்தேன். துறைமுகத்துக்கு எதிராக இருப்பவர்களால் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வழங்க முடியுமா? நான் மத்திய மந்திரி என்பதை தாண்டி, நான் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையில் குமரி மாவட்டத்துக்கு முன்னேற்ற திட்டங்களை கொண்டுவர முயற்சிக்கிறேன்.
8 வழி பசுமை சாலைத் திட்டத்துக்கு எதிராக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக செயல்படுவதை விடுத்து உருப்படியான செயல்களை மேற்கொள்ள வேண்டும். தமிழகம் சீரழிவை சந்தித்ததற்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளே காரணம்.
காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு பிடிவாதமாக இருப்பதாக கூறுகிறீர்கள். கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி அமைய காங்கிரசும், அவர்களின் தோழமை கட்சியான தி.மு.க.வும் முயற்சி செய்தது. எனவே மு.க.ஸ்டாலினும், திருநாவுக்கரசரும் சிறப்பு விமானத்தில் கர்நாடகம் சென்று, குமாரசாமியுடன் பேசி காவிரி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.