வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்: மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 2-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2018-06-21 22:15 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்வர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் வேதாரண்யம் பகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் கடந்த சில நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் கடல் அலைகள் சீற்றமாக காணப்படுகிறது. இதன் காரணமாக வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 2-வது நாளாக நேற்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல புழுதிக்காற்று அதிகமாக வீசுவதால் சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்