மலை உச்சியில் நின்று ‘செல்பி’ எடுக்க முயன்ற டெல்லி பெண் 600 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலி

மாத்தேரனுக்கு சுற்றுலா வந்த டெல்லியை சேர்ந்த பெண் மலை உச்சியில் நின்று ‘செல்பி’ எடுக்க முயன்றபோது, 600 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார்.

Update: 2018-06-20 22:30 GMT
மும்பை, 

மாத்தேரனுக்கு சுற்றுலா வந்த டெல்லியை சேர்ந்த பெண் மலை உச்சியில் நின்று ‘செல்பி’ எடுக்க முயன்றபோது, 600 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார்.

டெல்லி பெண்

டெல்லியை சேர்ந்த பெண் சரிதா சவான். இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு சுற்றுலா வந்தார். பின்னர் பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு சரிதா சவான் குடும்பத்தினர் நேற்றுமுன்தினம் மலைவாசஸ்தலமான ராய்காட் மாவட்டம் மாத்தேரனுக்கு சென்றனர். அங்கு அவர்கள் லுசியா பாயிண்ட் மலை உச்சிக்கு சென்று இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தனர்.

அப்போது, சரிதா சவான் தனது செல்போனில் ‘செல்பி’ எடுத்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென பலத்த காற்று வீசியுள்ளது.

தவறி விழுந்து பலி

இதில், மலை உச்சியில் நின்று கொண்டிருந்த சரிதா சவான் நிலை தடுமாறி 600 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதை பார்த்து அவரது கணவர் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து சரிதா சவானை ேதடும் பணியில் ஈடுபட்டனர். இரவாகியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

நேற்று காலை மீண்டும் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது, அங்கிருந்த பள்ளத்தாக்கில் பிணமாக கிடந்த சரிதா சவானின் உடலை மீட்டு வெளியே ெகாண்டு வந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்