பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-06-20 22:15 GMT

கடலூர்,

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், இதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் அரிகிருஷ்ணன், வட்ட துணை செயலாளர் சுந்தர்ராஜா, வட்டக்குழு உறுப்பினர்கள் அமாவாசை, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் மணிவாசகம், மாநிலக்குழு குளோப், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் துரை, கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், அதற்கு பட்டை நாமம்போட்டும், 2 மோட்டார் சைக்கிள்களுக்கு மாலை அணிவித்தும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதில் வட்டக்குழு உறுப்பினர் நாகராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்