புளியந்தோப்பில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
சென்னை புளியந்தோப்பில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திரு.வி.க.நகர்,
சென்னை புளியந்தோப்பு டிமலஸ் சாலையை சேர்ந்தவர் தில்லையப்பன்(வயது 29). புளியந்தோப்பு பி.எஸ்.மூர்த்தி நகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த இவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் அவர் வைத்து இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துச்சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வானமாமலை வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையை சேர்ந்த பர்கத் (20) மற்றும் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தார்.
அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான பர்கத், புழல் சிறையிலும், 17 வயது சிறுவன் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
புகார் அளித்த 8 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த சப்–இன்ஸ்பெக்டர் வானமாமலையை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், நேரில் அழைத்து பாராட்டினார்.