தலைவாசல் அருகே கார், வேன்களில் கடத்தப்பட்ட எரிசாராய கேன்கள் பறிமுதல், 5 பேர் கைது
தலைவாசல் அருகே கார், வேன்களில் கடத்தப்பட்ட எரிசாராய கேன்களை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.;
தலைவாசல்,
காஞ்சீபுரம் பகுதியில் இருந்து கார் மற்றும் வேன் மூலம் திருச்சி மாவட்டம், துறையூர் பகுதிக்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் மாவட்டம், தலைவாசல் ஏரிக்கரை எதிரே உள்ள ஓட்டல் ஒன்றின் அருகே நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில், பெரம்பலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் ஆத்தூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் நள்ளிரவில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் மற்றும் வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் வெள்ளை நிற கேன்களில் எரிசாராயம் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த வேன் மற்றும் சொகுசு காரில் வந்த டிரைவர்கள் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதில் அவர்கள் காஞ்சீபுரம் பாபுராம் பேட்டை இலப்பாக்கம் பகுதியை சேர்ந்த வேலு (வயது 41), திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா வாழவச்சனூர் பகுதியை சேர்ந்த இளங்கோ(34), புதுச்சேரி நடுக்கரை பகுதியை சேர்ந்த கவியரசன்(25), விழுப்புரம் ஜி.ஆர்.டி. தெருவை சேர்ந்த செல்வராஜ்(32), விழுப்புரம் மாம்பழ பட்டு ரோடு காந்தி நகர் பகுதியை சேர்ந்த இளவரசன்(40) ஆகிய 5 பேர் என்பதும், இவர்கள் காஞ்சீபுரத்தில் இருந்து துறையூருக்கு எரிசாராயம் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து ஆத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசார், அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் எரிசாராயம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், வேன் மற்றும் அதில் கொண்டு வரப்பட்ட 43 எரிசாராயம் நிரப்பப்பட்ட கேன்களையும் பறிமுதல் செய்தனர். இதில் சுமார் 1,300 லிட்டர் எரிசாராயம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.