சென்னை விமான நிலையத்தில் மேலாளர் அறைகள் மாற்றி அமைப்பு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மேலாளர் அறைகள் வெளியில் இருந்து உள்ளே செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.

Update: 2018-06-19 21:58 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு வரும் பயணிகள், அவர்களை வழியனுப்ப வரும் உறவினர்கள் ஏதாவது விசாரணை மற்றும் புகார்கள் தெரிவிக்க வேண்டுமென்றால் வெளியே இருந்து மேலாளர் அறைக்கு செல்ல வேண்டும். இதனால் பொதுமக்கள் யாரும் எளிதில் சென்று புகார் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. 

இதைத்தொடர்ந்து இந்திய விமான ஆணையக தலைவர் குருபிரசாத் மோகபதாரா விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க வெளியில் இருந்து மேலாளர் அறைக்கு சென்றுவர வசதியாக வழியை மாற்றி அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் உள்ள புறப்பாடு பகுதிகளில் மேலாளர் அறைகள் வெளியில் இருந்து உள்ளே செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த புதிய மேலாளர் அறைகளை இந்திய விமான நிலைய ஆணையக தலைவர் குருபிரசாத் மோகபதாரா திறந்துவைத்தார். இதில் சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி, தென் மண்டல முதன்மை இயக்குனர் ஸ்ரீகுமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்