பொன்னேரி அருகே உணவு பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

பொன்னேரி அருகே உணவு பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2018-06-19 20:35 GMT
பொன்னேரி, 

பொன்னேரியை அடுத்த உத்தண்டிகண்டிகை கிராமத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு குழந்தைகளுக்கான உணவு பொருட்கள், சத்து மாவு உள்ளிட்ட பல்வேறு வகை உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தொழிற்சாலை கிடங்கில் இருந்து கரும்புகை வந்தது. 

இதை பார்த்த காவலாளி இது குறித்து தொழிற்சாலை மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. கிடங்கு முழுவதும் தீ பரவியது.

மின்கசிவு காரணமாக

 தகவல் அறிந்ததும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வாய்கண்டிகை, செங்குன்றத்தில் இருந்து 5 வண்டிகளில் 50–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  தீயை அணைக்க போராடினர்.  மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் ஆனதாக தெரியவந்தது

 இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்