சாத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு போராட்டம் நடத்த த.மா.கா. முடிவு

சாத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு போராட்டம் நடத்த த.மா.கா. கட்சி முடிவு எடுத்துள்ளது.

Update: 2018-06-19 22:30 GMT

சாத்தூர்,

சாத்தூர் நகர, வட்டார த.மா.கா. ஊழியர் கூட்டம் கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தலைவர் அரசன் கார்த்திக் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் பாண்டியன், நகர செயலாளர் பொன்னுசாமி, துணைத் தலைவர் ஜோதி நிவாஸ், மேற்கு வட்டார தலைவர் முத்துவேல், கிழக்கு வட்டார தலைவர் தங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதில் நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்காததைக்கண்டித்தும் சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கோரியும் வருகிற 25–ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் சாத்தூர் பஸ் நிலைய வடக்கு பகுதியில் அசுத்தம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், படந்தால் பகுதியில் மோட்டார்வைத்து தண்ணீர் எடுப்பதை தடுக்க வேண்டும், அங்குள்ள உயர்நிலைப்பள்ளி பகுதியில் வாருகால் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும், படந்தால் சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ரே‌ஷன்கடைகளில் அத்தியாவசிய பொருட்களைதவிர மற்றவற்றை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மருதுபாண்டிய நகர், தென்றல்நகர், முத்துராமலிங்கபுரம், வசந்தம்நகர், அய்யனார் காலனி, சத்யா காலனி, வைகோநகர், அனுமன்நகர் பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தரவேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை நகர தலைவர் அய்யப்பன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்