மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு

கோவில் திருவிழாவில் நட்ட கொடி கம்பங்களை அகற்றியபோது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக பலியானார்.;

Update: 2018-06-19 19:58 GMT
பூந்தமல்லி, 

காஞ்சீபுரம் மாவட்டம் கோவூரை அடுத்த தண்டலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்குமார் (வயது 27), எலக்ட்ரீசியன். மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியில் நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக நடப்பட்ட வரவேற்பு கொடி கம்பங்களை அகற்றும் பணியில் நேற்று முன்தினம் வேல்குமார் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியில் இரும்பு கொடி கம்பம் உரசியதில் வேல்குமார் மீது மின்சாரம் தாக்கியது.

சாவு

 இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் மயங்கிய வேல்குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். வேல்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

 இது குறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்