நகராட்சி பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அபாயம்
திருவப்பூர் நகராட்சி பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மாணவர்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை திருவப்பூரில் நகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் தொடக்க பள்ளியும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு போதிய அளவு கழிவறை வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மாணவர்கள் போதிய கழிவறை வசதி இல்லாததால் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். இந்த பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் எளிதாக பள்ளிக்குள் வந்து செல்கின்றனர்.
மேலும் பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் மாலை வேளைகளில் திருவப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சமூக விரோதிகள் பலர் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மது அருந்துதல் போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மது அருந்தும் மர்மநபர்கள் பள்ளி வகுப்பறையில் மதுபாட்டில்களை உடைத்து போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் விடுமுறை முடிந்து காலையில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதேபோல திருவப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கழிவுநீர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தின் வழியாக செல்கிறது. இதில் கழிவுநீர் செல்லும் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் பள்ளி வளாக பகுதியில் குளம்போல் தேங்கி உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் நிறைந்து கிடப்பதால், அதில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாக பள்ளி மாணவ, மாணவிகளை கடிப்பதால், அவர்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். மேலும் கழிவுநீர் செல்லும் கால்வாயை முறையாக தூர்வாரி கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கு போதுமான அளவு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து சமூக விரோதிகள் உள்ளே வராமல் தடுக்க வேண்டும். மீறி பள்ளி வளாகத்திற்குள் வரும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.