ராகுல்காந்தி பிறந்த நாள் விழா பாளை. அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார்

ராகுல்காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார்.

Update: 2018-06-19 21:30 GMT

நெல்லை, 

ராகுல்காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார்.

ராகுல்காந்தி பிறந்த நாள் விழா

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாளை நேற்று நாடு முழுவதும் உள்ள காங்கிரசார் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடிஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நேற்று பிறந்த 17 குழந்தைகளுக்கும் தங்க மோதிரங்களை வழங்கினார்.

விழாவில் மாநில பொதுச்செயலாளர் வானமாமலை, மாவட்ட துணை தலைவர்கள் உதயகுமார், வெள்ளப்பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது அனஸ்ராஜா, மண்டல தலைவர்கள் மாரியப்பன், தனசிங் பாண்டியன், சுல்தான், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கேக் வெட்டி...

நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி பாளையங்கோட்டையில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கினார். இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அருண்குமார், ராஜீவ்காந்தி பேரவை தலைவர் அந்தோணி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்