18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் எர்ணாவூர் நாராயணன் பேட்டி

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எர்ணாவூர் நாராயணன் கூறினா

Update: 2018-06-19 20:30 GMT

தூத்துக்குடி, 

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எர்ணாவூர் நாராயணன் கூறினார்.

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தின் ஆய்வு கூட்டம் நேற்று மாலையில் தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் காமராசு, மாநில வர்த்தகரணி துணை செயலாளர் ரவிசேகர், தென்மண்டல செயலாளர் ராஜ்குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் அகஸ்டின் காபிரியேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் எர்ணாவூர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது;–

தூத்துக்குடியில் தினமும் காவல்துறை பொதுமக்களை கைது செய்து வருகிறார்கள். கடந்த 22–ந் தேதி ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருந்தேன். அடுத்த மாதம் 22–ந் தேதி குற்றாலத்தில் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இதனால் அனைத்து மாவட்டத்துக்கும் சென்று நிர்வாகிகளை சந்தித்து வருகின்றேன். தூத்துக்குடியில் நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சி குறித்து கேட்டறிந்தேன்.

தீர்ப்பு

காவிரி பிரச்சினையில் அரசு சரியான பாதையில் சென்றாலும் கர்நாடகா அரசு சரியான முறையில் ஆதரவு தரவில்லை. தமிழக அரசு இதனை உடனடியாக கவனத்தில் எடுத்து கொண்டு தமிழக விவசாயிகளை காப்பற்ற வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் வழக்கில் நீதிமன்றம் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் தற்போது, மக்களின் பிரச்சினைகளை தீர்க்காத தகுதி இல்லாத அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்