வங்கியில் 600 புரபெசனரி அதிகாரி பணிகள்

பரோடா வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 600 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2018-06-19 07:33 GMT
முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பரோடா வங்கி. தற்போது இந்த வங்கியில் ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு (ஸ்கேல்-1) தரத்திலான புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 600 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் போட்டிக்கு 303 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 162 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 90 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 45 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்..

விண்ணப்பதாரர்கள் 2-7-2018-ந் தேதியில் 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:


ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 2-7-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். தேர்வுக்கான அழைப்புக் கடிதம் 18-7-2018-ந் தேதிக்குப் பிறகு கிடைக்கும். ஆன்லைன் தேர்வு 28-7-2018-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

விரிவான விவரங்களை www.bankofba roda.co.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்