தெலுங்கானாவில் 18428 போலீஸ் வேலை

தெலுங்கானாவில் காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

Update: 2018-06-19 06:22 GMT
கான்ஸ்டபிள் பணிகளுக்கு அதிகபட்சமாக 16 ஆயிரத்து 925 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 1217 இடங்களும், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 55 இடங்களும், மற்றொரு அறிவிப்பின்படி கான்ஸ்டபிள் பணிக்கு 231 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 18 ஆயிரத்து 428 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இன்டர்மீடியட் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இதில் பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அரசு விதிகளின்படி தளர்வுகளும் பின்பற்றப்படுகின்றன. இவை பற்றிய விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, 30-6-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவை பற்றிய கூடுதல் விவரங்களை https://tslprb.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்