விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

விமான நிறுவனத்தில் 186 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 12-ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2018-06-19 06:14 GMT
இந்திய விமான ஆணையம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட் (தீயணைப்பு) மற்றும் சீனியர் அசிஸ்டன்ட் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. சீனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 39 இடங்களும், ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 147 இடங்களும் உள்ளன. மொத்தம் 186 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன், ரேடியோ என்ஜினீயரிங் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் சீனியர் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம், 10, 12-ம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்கள், கனரக வாகன லைசென்சு வைத்திருப்பவர்கள் ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 31-3-2017-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் படைவீரர்கள் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பம் 15-7-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aai.aero என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்