பெங்களூருவில் பரபரப்பு: பிரபல சங்கிலி பறிப்பு கொள்ளையனை போலீசார் சுட்டு பிடித்தனர்
பெங்களூருவில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து சென்றபோது பிரபல சங்கிலி பறிப்பு கொள்ளையன் தப்பி ஓடினான். அவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு மேற்கு மண்டலத்தில் உள்ள போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்களிடம் தங்க சங்கிலிகள் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இதையடுத்து, சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க துணை போலீஸ் கமிஷனர் ரவி சன்னன்னவருக்கு, போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, துணை போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.
அந்த தனிப்படையில் ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு சந்திரகுமாரும் ஒருவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் ஞானபாரதி மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அப்பகுதியில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தார். அந்த வாலிபர் மீது ஏட்டு சந்திரகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே வாலிபரை பிடிக்க அவர் முயன்றார். ஆனால் அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இதையடுத்து, வாலிபரை பிடிக்க தனது மோட்டார் சைக்கிளில் ஏட்டு சந்திர குமார் விரட்டி சென்றார். அதே நேரத்தில் ஞானபாரதி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் அவர் தகவல் கொடுத்தார். இதனால் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அங்கு விரைந்து சென்றார்கள். இந்த நிலையில், சந்திரகுமார் அந்த வாலிபரை சிறிது தூரத்தில் மடக்கி பிடித்தார். உடனே அந்த வாலிபர் தன்னிடம் இருந்த கத்தியால் சந்திரகுமாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதில், அவரது கையில் காயம் ஏற்பட்டது.
ஆனாலும் அவர், வாலிபர் தப்பி ஓடாமல் பார்த்துக்கொண்டார். பின்னர் அங்கு வந்த ஞானபாரதி போலீசார், ஏட்டு சந்திரகுமாருடன் சேர்ந்து வாலிபரை பிடித்தனர். அதன்பிறகு, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர், பெங்களூரு புறநகர் கும்பலகோடுவை சேர்ந்த அச்சித்குமார் (வயது 31) என்று தெரிந்தது. மேலும் அவர் தனியாக நடந்து செல்லும் பெண்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று தங்க சங்கிலிகள் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சித்குமாரை கைது செய்தார்கள். பின்னர் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் விசாரணைக்காக அவரை ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் இருந்து கும்பலகோடுவுக்கு வாகனத்தில் போலீசார் அழைத்து சென்றனர்.
அவ்வாறு செல்லும் வழியில் கெங்கேரி சேட்டிலைட் பகுதியில் வைத்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்று போலீசாரிடம் அச்சித்குமார் கூறினார். உடனே வாகனத்தில் இருந்து அவரை கீழே இறக்கி விட்டனர். பின்னர் திடீரென்று அங்கிருந்து அச்சித்குமார் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, அச்சித்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையில் ஞானபாரதி, கெங்கேரி, அன்ன்பூர்னேஷ்வரி நகர் போலீசார் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் கெங்கேரி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் அச்சித்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் கெங்கேரி அருகே கோடிபாளையா நைஸ் ரோட்டில் பதுங்கி இருந்த அச்சித் குமாரை போலீசார் சுற்றி வளைத்தனர். உடனே போலீசாரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு அவர் தப்பி ஓட முயன்றார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்ரய்யா அச்சித்குமாரை சரண் அடையும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் சரணடைய மறுத்து விட்டதுடன், போலீசாரை மறுபடியும் தாக்க முயன்றார்.
இதையடுத்து, அன்னபூர்னேஷ்வரி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அச்சித்குமாரை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். இதில், பிரவீனின் வலது காலில் குண்டு துளைத்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அச்சித்குமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். உடனடியாக அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி அறிந்ததும் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ரவி சன்னன்னவர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது அச்சித்குமார் மீது பெங்களூரு நகரில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட சங்கிலி பறிப்பு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதுகுறித்து அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்‘ ஆனதும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அச்சித்குமார் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ் ஏட்டு சந்திரகுமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதற்கிடையில், சங்கிலி பறிப்பு கொள்ளையனான அச்சித்குமாரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த தனிப்படை போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சுனில்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைதான அச்சித்குமார் தனியாக சென்று பெண்களிடம் நகை பறிப்பார்
பெங்களூருவில் கைதாகியுள்ள பிரபல சங்கிலி பறிப்பு கொள்ளையன் அச்சித்குமார் குறித்து துணை போலீஸ் கமிஷனர் ரவி சன்னன்னவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெண்களிடம் தங்க சங்கிலி பறித்து வந்த அச்சித்குமாரை கைது செய்த போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். பொதுவாக சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள், 2 அல்லது 3 பேராக ஈடுபடுவார்கள். ஆனால் அச்சித்குமார் கூட்டாளி யாரையும் சேர்ப்பதில்லை. அவர் ஒருவரே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று பெண்களிடம் நகைகளை பறிப்பார். தினமும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையும் அவர் சங்கிலி பறிக்கும் சம்பவங்களில் ஈடுபடுவார். குறிப்பாக நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தான் நகைகளை பறித்து வந்துள்ளார்.
பெங்களூருவில் மட்டும் 70 சங்கிலி பறிப்பு சம்பவங்களில் அவர் ஈடுபட்டுள்ளார். பெங்களூரு தவிர துமகூரு, பெங்களூரு புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பெண்களிடம் நகை பறித்து வந்துள்ளார். அவர் மீது 100-க்கும் மேற்பட்ட சங்கிலி பறிப்பு வழக்குகள் இருந்தும், போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார். அவரிடம் விசாரணை நடத்தி, பெண்களிடம் பறித்த தங்க சங்கிலிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.