ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. குளிக்கவும், பரிசல் இயக்கவும் நேற்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம்,
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதனால் நேற்று முன்தினம் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நேற்று 2-வது நாளாக தடை நீடித்தது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பரிசல்களும் இயக்கப்படவில்லை. எனவே பரிசல்கள் ஆற்றின் கரையோரம் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மெயின் அருவி, சினி அருவி போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படாததால் அருவிகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுகுறித்து எடப்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் மற்றும் சிலர் கூறும்போது, ‘நாங்கள் நண்பர்களுடன் ஒகேனக்கல் வந்தோம். அருவியில் குளிக்கவும், பரிசலில் பயணம் செய்யவும் திட்டமிட்டு இருந்தோம். தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் முடியவில்லை. இதனால் வருத்தமாக உள்ளது. இருந்தாலும் பெருக்கெடுத்து ஓடும் காவிரியை கண்டு ரசித்தோம். இது மகிழ்ச்சியாக உள்ளது.’ என்றனர்.