ஸ்டெர்லைட் ஆலையில் 1,000 டன் உள்ளது: கந்தக அமிலம் அகற்றும் பணி தொடங்கியது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள 1,000 டன் கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது. அவற்றை டேங்கர் லாரிகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை, தமிழக அரசு மூடி சீல் வைத்தது.
இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் மாலை ஸ்டெர்லைட் ஆலையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் அறிக்கை கலெக்டரிடம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் சிறிய கசிவு ஏற்பட்டு இருப்பதாகவும், அது உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியிருந்தார்.
நேற்று காலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி தொடங்கியது. கந்தக அமிலத்தை டேங்கர் லாரிகள் மூலம் வெளியே கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டது. உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று காலையில் மீண்டும் ஆலைக் குள் சென்றனர். ஆலையின் பிரதான வாசல் சீல் வைக்கப்பட்டு இருப்பதால், ஆலையின் இடதுபுறம் உள்ள வாசல் வழியாக அதிகாரிகள் சென்றனர். அந்த வாசல் வழியாகவே மதியம் 1 மணி அளவில் டேங்கர் லாரி ஒன்று ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்றது.
ஆலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் ஜெனரேட்டர் மூலம் மீண்டும் மின்வசதி செய்யப்பட்டது. தொடர்ந்து மேலும் 4 டேங்கர் லாரிகள் ஆலைக்குள் சென்றது. கன்டெய்னரில் உள்ள கந்தக அமிலத்தை மோட்டார் மூலம் பம்பிங் செய்துதான் டேங்கர் லாரிகளில் ஏற்ற வேண்டிய உள்ளது. இந்த பணி மிகவும் பாதுகாப்பாக நடந்து வருகிறது.
இதற்கிடையே, நேற்று மாலையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிகாரிகள் குழுவின் அறிக்கையின்படி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் கசிவு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உடனடியாக அந்த கன்டெய்னரை காலி செய்து, அதில் உள்ள கந்தக அமிலத்தை வெளியே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு அதிகாரிகள் தலைமையில் கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலைகள் ஆய்வாளர், மாவட்ட தீயணைப்புதுறை அலுவலர், வருவாய்த்துறை மற்றும் போலீசார் உள்ளனர். இரவு நேரங்களிலும் பணி தொடர்ந்து நடைபெற ஆலையில் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு உள்ள அமிலத்தை லாரிகளில் ஏற்ற, வெளியே இருந்து மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அமிலத்தை வெளியேற்ற தற்போது 5 டேங்கர் லாரிகள் தயார் நிலையில் உள்ளன. அதில் கந்தக அமிலம் ஏற்றும் பணி நடந்து வருகிறது. கந்தக அமிலம் ஏற்றிய பிறகு டேங்கர்கள் வெளியே கொண்டு செல்லும் பணி நடக்கும்.
ஆலையில் சுமார் 1,000 டன் கந்தக அமிலம் உள்ளது. இதனை முழுமையாக வெளியேற்ற ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து பணியாற்ற வேண்டி இருக்கிறது. இதனால் ஓரிரு நாட்களில் ஆலையில் இருந்து கந்தக அமிலம் முழுமையாக வெளியே கொண்டு செல்லப்படும்.
ஸ்டெர்லைட் ஆலை இந்த அமிலத்தை ஏற்கனவே வெளியே உள்ள ஒரு சில நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்தது. அதன்படி, வெளியே கொண்டு செல்லப்படும் அமிலம் இதுவரை ஸ்டெர்லைட் ஆலையால் கொடுக்கப்பட்டு வந்த நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டு உள்ளதாலும், அதனை அகற்றும் பணி நடந்து வருவதாலும் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆலை அமைந்து இருக்கும் பகுதியில் பொதுமக்களிடையே ஒருவித அச்சமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.