மோட்டார் சைக்கிள் மீது மீன் லாரி மோதியது: தனியார் நிறுவன ஊழியர், மைத்துனருடன் பலி
விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மீன் லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர், மைத்துனருடன் பலியானார்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள லக்கம்பட்டியைச் சேர்ந்தவர் காசி மகன் ராஜகோபால் (வயது 40). இவர் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜகோபால் ஊருக்கு வந்தார்.
நேற்று முன்தினம் காலையில் ராஜகோபால், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மணிவளை பகுதியில் வசிக்கும் தன்னுடைய பெற்றோரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது தன்னுடைய மைத்துனர் முத்துராமலிங்கத்தையும் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
அங்கு பெற்றோரை பார்த்த ராஜகோபால் சிறிது நேரம் கழித்து மீண்டும் லக்கம்பட்டிக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை முத்துராமலிங்கம் ஓட்டினார். ராஜகோபால் பின்னால் அமர்ந்து இருந்தார். வேம்பாரை அடுத்த வடக்கு செவல் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் பிற்பகல் 3 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ராஜகோபால், முத்துராமலிங்கம் ஆகிய இருவரும் ஆளுக்கொரு திசையில் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்தது.
விபத்தை கண்டவுடன் அந்த பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். தகவல் அறிந்த சூரங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி, தூத்துக்குடியில் இருந்து சாயல்குடிக்கு மீன்களை ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரான சாயல்குடி காமராஜர் தெருவைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் சங்கரலிங்கத்தை (35) தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர் தனது மைத்துனருடன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இருவரது உடல்களையும் பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.
விபத்தில் இறந்த ராஜகோபாலுக்கு புஷ்பம் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். முத்துராமலிங்கத்துக்கு ராசாத்தி என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.