சூறாவளி காற்றுடன் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் விவசாயிகள் கவலை
ஆம்பூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆம்பூர்,
ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்களி பகுதியில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தது.
மேலும் அப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.