தலையாட்டி பொம்மை, கலைத்தட்டு தொழில்களை அரசு பாதுகாக்க வேண்டும்
தஞ்சையின் அடையாளமாக விளங்கும் தலையாட்டி பொம்மை, கலைத்தட்டு தொழில்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தி உள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவையின் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் துரைராஜ், மணிமாறன், குமரேசன், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முருகேசன் வரவேற்றார். கூட்டத்தில் தஞ்சை வணிகர் சங்க பேரவையில் 21 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.
சென்னையில் நடந்த வணிகர் தின மாநில மாநாடு வெற்றி மாநாடாக அமைந்ததற்கு காரணமான பேரவை தலைவர் வெள்ளையனுக்கு பாராட்டு தெரிவிப்பது. கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும். பல கோடி மதிப்பிலான தஞ்சை பெரியகோவிலை கட்டிய ராஜராஜசோழன் சிலையை மீட்டெடுத்த போலீஸ் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவுக்கு பாராட்டு தெரிவிப்பது.
ஆன்லைன் வணிக மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர்கள் இதனை தவிர்த்தால் தான் ஆன்லைன் வணிக மோசடியை நாம் தவிர்க்க முடியும். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். தஞ்சையின் அடையாளமாக விளங்கும் தலையாட்டி பொம்மை, கலைத்தட்டு ஆகிய தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. இந்த தொழில் செய்பவர்களை தமிழக அரசு பாதுகாத்து தஞ்சையின் அடையாளத்தை காப்பாற்ற வேண்டும்.
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசனை தாக்கிய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பட்டுக்கோட்டை வணிகர் சங்க தலைவர் ராமானுஜம் வாகனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து முறையாக நடவடிக்கை எடுக்காத பட்டுக்கோட்டை போலீசாரை வன்மையாக கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வணிகர் சங்க பேரவை நிர்வாகிகள் சேதுராமன், கருப்பையா, துரையரசன், ராமசிவன், உலகநாதன், பூதலூர் செல்வக்குமார், ஆடுதுறை சண்முகம், செல்வகுமார், வெற்றிவேல், இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.