பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் பல்நோக்கு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

பல்நோக்கு ஊழியர்கள் 630 பேர் புதுவை மாநில பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

Update: 2018-06-18 21:15 GMT

புதுச்சேரி,

புதுவை மாநில பொதுப்பணித்துறையில் பல்நோக்கு ஊழியர்கள் 630 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டு கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்