அமராவதி ஆற்று தண்ணீர் கரூர் நகரை அடைந்தது பொதுமக்கள் மகிழ்ச்சி
அமராவதி ஆற்று தண்ணீர் நீண்ட நாட்களுக்கு பிறகு கரூர் நகரை அடைந்து ஓடியது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கரூர்,
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள அமராவதி அணையில் விவசாய தேவைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையிலிருந்து தினமும் 1,800 கனஅடி நீர் வீதம் அமராவதி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தை அடைந்த அந்த தண்ணீரானது ஒத்தமாந்துறை, அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் பகுதியிலுள்ள தடுப்பணைகளை தாண்டி நேற்று காலை செட்டிப்பாளையம் தடுப்பணையை அடைந்து தண்ணீர் நிரம்பி வழிந்தது. பின்னர் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையை கடந்து சீறிப்பாய்ந்து தண்ணீர் சென்றது.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கரூர் நகருக்குள் ஓடும் அமராவதி ஆற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு தண்ணீர் வருவதை காண மக்கள் புதிய அமராவதி பாலம், லைட்அவுஸ் பழைய அமராவதி பாலம், பசுபதிபாளையம் பாலம் உள்ளிட்டவற்றில் திரளானோர் நின்றிருந்தனர். பின்னர் கரூர் நகருக்குள் அமராவதி தண்ணீர் வந்ததை கண்டதும் பலர் உற்சாக மிகுதியில் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த தண்ணீரானது இன்று (செவ்வாய்க்கிழமை) திருமுக்கூடலூர் காவிரி ஆற்றில் கலக்க வாய்ப்பிருப்பதாக நதிநீர் ஆர்வலர்கள் கணித்துள்ளனர். அமராவதி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் அங்குள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சினை தீர வழிவகுக்கும். நிலத்தடி நீர்மட்டமும் கரூர் நகரில் உயரும் என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இது குறித்து காவிரி நீர் பாசன விவசாயிகள் நலசங்க தலைவர் கரூர் மகாதானபுரத்தை சேர்ந்த ராஜாராம் கூறுகையில், கரூர் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நீர் அமராவதி ஆற்றில் திறக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த நீரை வைத்து விவசாய தேவையை பூர்த்தி செய்ய இயலாது. திருப்பூரில் உள்ள வாய்க்கால்களுக்கே பெரும்பாலான தண்ணீர் செல்கிறது. எனவே கரூரின் கடைமடை பகுதியிலும் விவசாயம் நடக்க அமராதி ஆற்று நீரை பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமலிங்கம் கூறுகையில், ஆனால் தற்போது இந்த நீர் அமராவதி ஆற்று வாய்க்கால் உள்ளிட்டவற்றுக்கு சென்றாலும் பயிர் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஜூலை 15-க்கு பிறகு இந்த நீர் கரூர் அமராவதி ஆற்றில் ஓடினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். எனினும் இந்த நீரை மாசுபடுத்தும் வகையில் ஆற்றில் யாரேனும் சாயக்கழிவுநீரை திறந்து விடுகின்றனரா? என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரூர் அமராவதி ஆற்று பாசனம் மூலமாக ஆகஸ்டு மாதத்தில் கரும்பு, பருத்தி அதிகளவில் பயிரிடப்படும். எனவே ஆகஸ்டிலும் தண்ணீர் திறக்க கரூர், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கலந்து பேசி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.