தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி பலியான வாலிபரின் உடல் மீட்பு
தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி பலியான வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.
தாராபுரம்,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கண்ணன்தேவன் டீ எஸ்டேட்டை சேர்ந்தவர் சங்கரபாண்டியன். இவரது மகன் கவியரசன் (வயது 21). இவர் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் தங்கி அருகே உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பிரிண்டிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சிவகாசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 7 பேருடன் கவியரசன் சிவகாசிக்கு சென்றிருந்தார்.
அங்கு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர்கள், சிவகாசியில் இருந்து காரில் திருப்பூருக்கு புறப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை தாராபுரம் வந்த அவர்கள், அமராவதி ஆற்றங்கரையில் காரை நிறுத்தினார்கள். பின்னர், காரில் வந்த கவியரசன் உள்பட 6 பேர், அமராவதி ஆற்றில் இறங்கி குளித்தனர். 2 பேர் குளிக்காமல் காரின் அருகிலேயே நின்றுகொண்டனர்.
இந்த நிலையில் கவியரசன் திடீரென்று, ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சுழலில் சிக்கிய கவியரசன் மேலே வரமுடியாமல் தண்ணீரில் தத்தளித்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
உடனே அவர்கள், தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லையா தலைமையிலான போலீசார் மற்றும் தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் ஆற்றில் இறங்கி, கவியரசனின் உடலை தேடினார்கள். ஆனால் அவருடைய உடல் கிடைக்கவில்லை. மேலும் இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் கவியரசனின் உடலை மீட்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை 6 மணிக்கு மீண்டும் கவியரசன் உடலை தீயணைப்பு படையினர் தேடும் பணியை தொடங்கினார்கள். மேலும் கவியரசன் ஆற்றில் மூழ்கி பலியானது குறித்து அறிந்த அவருடைய பெற்றோரும் அமராவதி ஆற்றுக்கு வந்தனர்.
சுமார் 4 மணி நேர தேடுதலுக்கு பின்னர் கவியரசனின் உடல் சேற்றில் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருடைய உடல் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது. கவியரசனின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இதைத்தொடர்ந்து கவியரசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.