பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்

திருத்தங்கல் 18–வது வார்டில் உள்ள முத்துமாரிநகரில் பொதுமக்களை சந்தித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று காலை குறைகளை கேட்டறிந்தார்.

Update: 2018-06-18 22:15 GMT

சிவகாசி,

பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனை பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நியாயமானதுதான். தமிழகத்தில் நாள்தோறும் 35 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் தரமாக உள்ளதால் விற்பனை அதிகரித்திருக்கிறது. 18 எம்.எம்.எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுந்த சூழ்நிலைக்கான முடிவை முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் எடுப்பார்கள். அ.தி.மு.க விலிருந்து பிரிந்து சென்றவர்களை முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் தொடர்ந்து ஏற்றுக் கொண்டுதான் வருகின்றனர். காவிரி பிரச்சனை உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்காக தமிழக அரசு செய்த சாதனைகளை மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கட்சிகள் தூண்டி விடுகின்றனர். காவிரிக்காக தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தின் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி தொடங்க தேவையான முயற்சிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வருகிறார். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். பேட்டியின் போது அ.தி.மு.க நகர செயலாளர் பொன்சக்திவேல், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் அ.செல்வம், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் ரமணா, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ரவிச்செல்வம் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்