கடத்தப்பட்ட பள்ளி தாளாளர் மீட்பு ஒருவர் கைது; போலீசார் விசாரணை
புதுக்கோட்டை அருகே ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட பள்ளி தாளாளரை போலீசார் மீட்டனர். மேலும் இது தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவரங்குளம்,
புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் 1-ம் வீதியை சேர்ந்தவர் தர்மராஜ்பிரபு (வயது 64). இவர் புதுக்கோட்டை அருகே உள்ள கைக்குறிச்சி ஏ.டி.ஆர். மெட்ரிக் பள்ளியின் தாளாளராக உள்ளார். மேலும் இவர் மேட்டுப்பட்டியில் நவீன அரிசி ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவர் நித்யானந்தாவின் சீடராகவும் இருந்து வருகிறார்.
இவர் புதுக்கோட்டை அருகே வேப்பங்குடியில் தனது தோட்டத்தில் உள்ள கோவிலுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்று வழிபடுவது வழக்கம். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கோவிலில் வழிபாடு நடத்த தனக்கு சொந்தமான காரில் தர்மராஜ்பிரபு புறப்பட்டு சென்றார். காரை டிரைவர் தேவேந்திரன் ஓட்டினார். அங்கு மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் நின்று கொண்டிருந்த மர்மநபர்கள் சிலர் காரை மறித்து, காரின் கண்ணாடியை உடைத்து, தர்மராஜ்பிரபுவை அதேகாரில் டிரைவருடன் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தர்மராஜ்பிரபுவின் மகன் முத்துக்குமரன் கணேஷ்நகர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு தர்மராஜ்பிரபுவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது ரூ.2 கோடி கொடுத்தால், உடனடியாக தர்மராஜ்பிரபு, டிரைவர் தேவேந்திரன் ஆகிய 2 பேரையும் விட்டுவிடுவோம். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்றும், மேலும் கந்தர்வகோட்டையில் ஒருவரை தொடர்பு கொண்டு, அவரிடம் பணத்தை கொடுக்க வேண்டும் என்று கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் முத்துக்குமரன் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கந்தர்வகோட்டைக்கு முத்துக்குமரனுடன் போலீசாரும் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில் புதுக்கோட்டை போலீசார் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட போலீசாரை தொடர்பு கொண்டு கண்ணாடி உடைந்த நிலையில் ஒரு காரில் கடத்தல்காரர்கள் பள்ளி தாளாளர் தர்மராஜ்பிரபுவை கடத்தி வருவதாக தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் கடத்தல்காரர்கள் சென்ற கார் முத்துப்பேட்டை அடுத்துள்ள உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அருகே நிறுத்தப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதற்கிடையே கடத்தல்காரர்கள் அங்கிருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டு முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டையில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வேகமாக வந்த கடத்தல்காரர்களின் கார் தடுப்பு கட்டைகளை உடைத்து கொண்டு, கிழக்கு கடற்கரை சாலையில் மின்னல் வேகத்தில் சென்றது.
இதைத்தொடர்ந்து மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் மணமேல்குடி அருகே உள்ள கட்டுமாவடி பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைத்தும், ரோந்து வாகனத்தை சாலையில் நிறுத்தியும் தயார் நிலையில் இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கடத்தல்காரர்கள் இனி தப்பிக்க முடியாது என தெரிந்தவுடன் காரை கட்டுமாவடியில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். இதைத்தொடர்ந்து மணமேல்குடி போலீசார் விரைந்து சென்று காருக்குள் இருந்த தர்மராஜ்பிரபு மற்றும் டிரைவர் தேவேந்திரன் ஆகியோரை மீட்டு புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தனர்.
இதற்கிடையில் கந்தர்வகோட்டையில் பணம் வாங்குவதற்காக காத்திருந்த ராமச்சந்திரன் என்பவரை போலீசார் கைது செய்து புதுக்கோட்டைக்கு அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் தர்மராஜ்பிரபுவின் நவீன அரிசி ஆலையில் வேலை செய்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர்கள் பணம் பறிக்கும் நோக்கில் கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை அருகே கடத்தப்பட்ட சில மணி நேரத்தில் தனியார் பள்ளி தாளாளரை மீட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.