காவிரி பிரச்சினையில், விவசாயிகளுக்கு துரோகம் விளைவித்தவர் கருணாநிதி
காவிரி பிரச்சினையில், விவசாயிகளுக்கு துரோகம் விளை வித்தவர் கருணாநிதி என்று மயிலாடுதுறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நகர செயலாளர் செந்தில்நாதன் வரவேற்றார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது.
கிட்டத்தட்ட 38 ஆண்டு காலம் நடைபெற்ற காவிரி பிரச்சினைக்கு இன்றைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அம்மாவின் அரசினால் இந்த தீர்வு எட்டப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் காவிரி நீரை முழுமையாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை அமைத்து கொண்டனர்.
ஓராண்டு, ஈராண்டுகள் அல்ல, 38 ஆண்டுகள் காவிரி நீரை பெற தமிழக விவசாயிகள், பல்வேறு கட்சி தலைவர்கள் போராடினர். அதில் முக்கியமாக போராடியது அ.தி.மு.க. என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். யார் வேண்டுமானாலும் போராடலாம். ஆனால் யார் போராடினால் தீர்வு கிடைக்கும் என்பது மக்களுக்கு தெரியும். அந்த தீர்வை பெற்று தந்தது அ.தி.மு.க.வும், அ.தி.மு.க. அரசும் தான்.
1970-ம் ஆண்டு காவிரி பிரச்சினை வந்தது. அப்போது தமிழகத்தை தி.மு.க. ஆட்சி செய்து கொண்டு இருந்தது. 1971-ம் ஆண்டு சட்டசபையிலும், மேலவையிலும் காவிரி பிரச்சினைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் அன்றைய முதல்-அமைச்சராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் 1972-ம் ஆண்டு அந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டார். இது எவ்வளவு பெரிய நாடகம், பாருங்கள்.
சட்டமன்றத்திற்கு தெரிவிக்கவில்லை, மேலவைக்கும் தெரிவிக்கவில்லை. இந்த 2 அவைகளுக்கும் தெரிவிக்காமலேயே வழக்கை கருணாநிதி திரும்ப பெற்றுக் கொண்டார். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தவர் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி. தி.மு.க. சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்த நேரம் அது. நீங்கள் வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் நடப்பது வேறு என்று இந்திராகாந்தி மிரட்டியதன் காரணமாக 2 அவைகளுக்கும் தெரியாமலேயே வாபஸ் பெற்று விவசாயிகளுக்கு துரோகம் விளைவித்தவர் கருணாநிதி.
இன்றைக்கு இவ்வளவு காலம் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் அதற்கு காரணம் அவர்கள்தான். அன்றைக்கு ஒழுங்காக வழக்கை நடத்தி இருந்தால் என்றைக்கோ தீர்வு கிடைத்து இருக்கும். காவிரி பிரச்சினையும் தீர்ந்து இருக்கும். அன்றைக்கு தீர்மானத்தை நிறைவேற்றி, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை இரு அவைகளுக்கும் தெரியாமல் திரும்ப பெற்றதற்கு என்ன காரணம்?. இன்றைக்கு நடைபயிற்சி மேற்கொள்வதைப்போல, மு.க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். காவிரி வழக்கை எதற்காக வாபஸ் பெற்றீர்கள் என்று எத்தனையோ கூட்டங்களில் கேள்வி கேட்கிறோம். அதற்கு பதில் இல்லை.
அன்றைக்கு முதல்-அமைச்சராக இருந்தவர்(கருணாநிதி) மக்களை பற்றியும், விவசாயிகளை பற்றியும் கவலைப்படவில்லை. தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று கருதி அன்றைக்கு வழக்கை வாபஸ் பெற்றார். அதன்பிறகு தான் 1983-ம் ஆண்டு தமிழ்நாடு காவிரி பாசன விவசாயிகள் உரிமை பாதுகாப்பு சங்கம் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது.
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் அந்த வழக்கோடு தமிழக அரசு இணைந்து கொண்டது. அதுமட்டுமன்றி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எம்.ஜி.ஆர். கடிதம் எழுதினார். நடுவர் மன்றம் அமைப்பதற்கு காரணமாக இருந்தது அ.தி.மு.க. அரசு என்பதை எம்.ஜி.ஆர். நிருபித்து காண்பித்தார். அவரது மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தினார்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில்தான் நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு வந்தது. இடைக்கால தீர்ப்பாக 205 டி.எம்.சி. கிடைத்தது. அந்த தீர்ப்பு கிடைத்த பிறகு நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும். அந்த காலக்கட்டத்தில் தி.மு.க. ஆட்சி நடந்தது. மத்திய ஆட்சியிலும் தி.மு.க. பங்கேற்று இருந்தது. காவிரி பிரச்சினைக்கு ஏதாவது செய்தார்களா? என்றால் இல்லை. 5.2.2007-ல் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட தி.மு.க. முயற்சி எடுக்கவில்லை. 19.2.2007-ல் கருணாநிதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்.
அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் கருத்து தெரிவிக்கப்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட முயற்சி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதுமட்டுமல்லாமல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவே இல்லை.
23.4.2007-ல் கேரள அரசு, நடுவர் மன்றத்தால் சரியான தீர்ப்பு கிடைக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 24.4.2007-ல் கர்நாடக அரசு, இறுதி தீர்ப்பில் எங்களுக்கு திருப்தியில்லை, பாதகமாக வந்திருக்கிறது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதன்பிறகு 2007-ம் ஆண்டு 5-வது மாதத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. தீர்ப்பு வந்த பின்னர் இடைப்பட்ட 2 மாத காலத்தில் எந்த முயற்சியையும் தி.மு.க. எடுக்கவில்லை.
உண்மையிலேயே விவசாயிகள் மீது பாசமோ, அன்போ இருந்திருந்தால் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரிநீர் ஒழுங்காற்றுக்குழுவையும் அமைத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இன்றைக்கு மத்திய அரசுக்கு சரியான அழுத்தம் அ.தி.மு.க. கொடுக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் சொல்லிக் கொண்டு இருக்கிறார். நீங்களும் 2007-ல் மத்தியில் ஆட்சியில் இருந்தீர்கள். இறுதி தீர்ப்பு வந்த பிறகு 2 மாத காலம் உங்கள் ஆட்சியில் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்?. அப்போது மத்திய அரசுக்கு நீங்கள் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டியது தானே. சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?.
அந்த 2 மாதத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் நிச்சயம் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கும். காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவும் நமக்கு கிடைத்திருக்கும். நமக்கு கிடைக்க வேண்டிய நீரும் கிடைத்திருக்கும். யார் செய்தது துரோகம்?. தி.மு.க. தலைவர் கருணாநிதி துரோகம் செய்தார். இதனை மறுக்க முடியுமா?
ஒரு மாநிலத்தின் உரிமையை பெறுவதற்காக 22 நாட்கள் காவிரி டெல்டா விவசாயிகளின் குரலாக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க.வின் குரல் ஒலித்தது. இதனை மறுக்க முடியுமா? பாராளுமன்றமே நடக்க முடியாமல் ஒத்தி வைக்கக்கூடிய அளவுக்கு அழுத்தம் கொடுத்தது அ.தி.மு.க. அரசு. நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும், உங்கள் வாரிசு அமைச்சராக இருந்தபோதும் நடவடிக்கை எடுத்து இருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
எதற்காக ஆட்சி அதிகாரத்தை மக்கள் உங்களிடம் கொடுத்தார்கள். மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக தான். இந்த பிரச்சினையை சரியாக கையாண்டு மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக உங்களை பாராளுமன்ற உறுப்பினராக்கி மத்திய ஆட்சியில் உங்களுக்கு அதிகாரத்தை கொடுத்தார்கள். ஆனால், அதை மறந்துவிட்டு உங்களது சுயலாபத்திற்காக, அதிகாரத்திற்காக, பதவிக்காக செயல்பட்டீர்கள். ஆனால், அ.தி.மு.க. அப்படியல்ல. இந்திய வரலாற்றிலேயே மாநில பிரச்சினைக்காக 22 நாட்கள் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து வரலாறு படைத்த அரசு அ.தி.மு.க. தான்.
2007-2011-ம் ஆண்டு வரை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை தி.மு.க. சரியாக நடத்தவில்லை. ஆனால், இன்றைக்கு சரியாக செயல்படவில்லை, சட்ட வல்லுனர்களை வைத்து வாதாடவில்லை என்று செயல்படாத, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் காவிரி வழக்கிற்கு உயிரூட்டினார். அப்போது இருந்த பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டும் என்று பலமுறை கடிதம் எழுதினார். ஆனால் விடிவுகாலம் கிடைக்கவில்லை.
அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் அடிப்படையில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற தீர்ப்பை பெற்ற தலைவி ஜெயலலிதா. இதற்காகத் தான் விவசாயிகள் அனைவரும் சேர்ந்து தஞ்சையில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு கூட்டம் நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ‘பொன்னியின் செல்வி‘ என்ற பட்டத்தை ஜெயலலிதாவுக்கு கொடுத்தார்கள். அப்போது நானும் ஒரு விவசாயி என்று மகிழ்ச்சியுடன் ஜெயலலிதா கூறினார். இது வரலாற்று சாதனை.
ஒரு முதல்-அமைச்சர் எப்படி இருக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்று வரலாற்று சாதனையை பெற்றார். ஆனால் அதன்பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டது. அதனை அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதினார். எந்த தீர்வும் கிடைக்காததால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்றைக்கு தீர்வு கிடைத்திருக்கிறது. சட்டபோராட்டத்தின் மூலமாகத்தான் இந்த தீர்ப்பை ஜெயலலிதா பெற்று தந்திருக்கிறார்.
விவசாயிகளின் ஒட்டுமொத்த பிரச்சினையும் தீர்த்து வைத்த அரசு அ.தி.மு.க. அரசு. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இன்றைக்கு காவிரி மேலாண்மை ஆணையம், காவிரிநீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், காவிரிநீர் ஒழுங்காற்று குழுவுக்கும் உறுப்பினரை நியமித்துள்ளது. கேரளா, புதுச்சேரி அரசும் உறுப்பினரை நியமித்துள்ளது. ஆனால் கர்நாடக அரசு உறுப்பினரை நியமிக்காமல் மறுத்து வருகிறது.
இதுகுறித்து டெல்லியில் நடந்த கூட்டத்தில் நான் பேசினேன். பருவ காலம் தொடங்கி விட்டது. விவசாயிகள், தண்ணீரை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். எனவே இரண்டு குழுக்களின் கூட்டத்தை உடனே கூட்டி அந்த கூட்டத்தின் வாயிலாக 38 ஆண்டுகளாக போராடிய விவசாயிகளுக்கு தண்ணீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். மத்திய மந்திரி நிதின்கட்காரியை நேரில் சந்தித்தபோதும் வலியுறுத்தினேன். காவிரி பிரச்சினையை கையாண்டு அ.தி.மு.க. அரசு தீர்த்து வருகிறது. தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது காவிரி பிரச்சினைக்காக என்றைக்காவது குரல் கொடுத்திருக்கிறதா?.
விவசாயிகளின் உரிமைக்காக போராடிய அரசு அ.தி.மு.க. அரசு தான். தமிழகத்தின் உரிமையை பெற, விவசாயிகளின் உரிமையை பெற மாவட்டந்தோறும் உண்ணாவிரதம் இருந்து விவசாயிகளின் குரலை ஒலிக்க செய்தோம். விவசாயிகளின் நலனை காக்க தன்னையும் வருத்திக் கொண்டு, 80 மணி நேரம் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். அவர் மண்ணை விட்டு மறைந்தாலும், விவசாயிகளின் நெஞ்சில் நிலைத்து இருப்பார்.
ஜூன் 12-ல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகின்றார். எல்லோருக்கும் தெரியும் அணையில் தண்ணீர் இருந்தால் திறக்க முடியும் என்று. அணையில் தண்ணீர் இல்லை. யார் ஆட்சியில் இருந்தாலும் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தால்தான் திறக்க முடியும். போதிய அளவு தண்ணீர் இல்லையென்றால், யார் ஆட்சியில் இருந்தாலும் திறக்க முடியாது. 5 ஆண்டுகள் அணை திறக்க வாய்ப்பில்லை என்றாலும் சரியான நேரத்தில் குறுவை சாகுபடி செய்ய வேண்டும் என்பதற்காக குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இந்த ஆண்டு ரூ.115 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஆயில் என்ஜின் விவசாயிகளுக்கும் இந்த மானியம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதன்படி 2 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 50 சதவீதம் பின்பட்ட மானியம் பெற ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்காக ரூ.328 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,511 ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படும்.
இந்த பணிக்காக டெண்டர் கிடையாது. 10 சதவீத விவசாயிகள் பங்களிப்புடனும், 90 சதவீத அரசு பங்களிப்புடனும் இப்பணி நடைபெறும். மழைநீர் கடலில் கலக்காத வகையில் தடுப்பணை, அணைகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பருவமழை நன்றாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பருவமழை பெய்யும், மேட்டூர் அணை நிரம்பும். இறைவன் நம் பக்கம் இருக்கின்றார்.
இவ்வாறு அவர் பேசினார். முடிவில் மாவட்ட இணை செயலாளர் மீனா நன்றி கூறினார்.