ரூ.1.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ரோகிணி வழங்கினார்

கெங்கவல்லியில் ஜமாபந்தியில் ரூ.1.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

Update: 2018-06-17 23:30 GMT
கெங்கவல்லி,

கெங்கவல்லி தாசில்தார் அலுவலகத்தில் 5 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 1,822 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 1,172 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

5 நாட்கள் நடந்த ஜமாபந்தியில் மொத்தம் ரூ.1 கோடியே 12 லட்சத்து 59 ஆயிரத்து 117 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார். முன்னதாக தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வருவாய் பதிவேடுகள், பட்டா சிட்டா பதிவேடு, வரிவசூல் பதிவேடு, நில அளவை பதிவேடு, வருவாய் வரைபட பதிவேடு, ஏ-பதிவேடு, சிறப்பு பதிவேடு, நத்தம் அடங்கல் பதிவேடு, கிராம கணக்குகள் மற்றும் நில அளவை சங்கலி ஆகியவற்றை கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார். இதில் தாசில்தார்கள் வரதராஜன், ஷபி உண்ணிநிஷா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்