அதிகாரிகளுக்கு பொய் புகார் அனுப்பிய கோவில் ஊழியர் மீது வழக்கு
சமூக ஆர்வலரின் கையெழுத்தை பயன்படுத்தி அதிகாரிகளுக்கு பொய் புகார் அனுப்பிய கோவில் ஊழியர் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் டவுன் பகுதியில் வசித்து வருபவர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன். சமூக ஆர்வலரான இவர், திருத்தொண்டர்கள் சபை நிறுவனராகவும், சேலம் சுகவனேசுவரர் கோவில் கட்டளைதாரராகவும் உள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பி அதற்கு தீர்வு காண உறுதுணையாக இருந்து வருகிறார். இவரது பெயரில் இ-மெயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கும், அரசின் செயலர்களுக்கும் ஒரு புகார் மனு சென்றது.
அதில், சேலம் சுகவனேசுவரர் கோவிலில் கணக்காளராக பணியாற்றி வரும் வன்னியதிலகம் மீது புகார் கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த புகாரை அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் அனுப்பாமல் அவரது பெயரில் வேறு ஒருவர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தனது கையெழுத்தை போலியாக பதிவு செய்து பயன்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், ராதாகிருஷ்ணனின் கையெழுத்தை மற்றொரு புகார் மனுவில் இருந்து எடுத்து, அதை போலியாக பயன்படுத்தி கணக்காளர் வன்னியதிலகம் மீது உயர் அதிகாரிகளுக்கு இ-மெயிலில் புகார் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புகார் மனுவை சுகவனேசுவரர் கோவில் அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவு ஊழியராக பணியாற்றும் ராஜேஸ் என்பவர் அனுப்பியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவில் ஊழியரான அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்ததோடு தலைமறைவாக உள்ள ராஜேசை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சில அதிகாரிகளுக்கு தொடர்பு ஏதும் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.