நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அரசியல், சினிமா, சமூக பிரச்சினை தொடர்பாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

Update: 2018-06-17 22:15 GMT

மதுரை,

அரசியல், சினிமா, சமூக பிரச்சினை தொடர்பாக பல்வேறு கருத்துகளை நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில், 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திருநங்கைகளுடன் ஒப்பிட்டு கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார். இதற்கு திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்தநிலையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் மணிஅமுதன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்