நகை மோசடி செய்ததாக பெண் மீது வழக்கு

மதுரை கூடல்புதூர் அசோக்நகரை சேர்ந்தவர் ரவீந்திரபாபு.;

Update: 2018-06-17 22:15 GMT

மதுரை,

மதுரை கூடல்புதூர் அசோக்நகரை சேர்ந்தவர் ரவீந்திரபாபு. இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புதூரை சேர்ந்த சீதாலட்சுமி என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவீந்திரபாபு, சீதா லட்சுமியிடம் 32 பவுன் நகையை கொடுத்து அடகு வைக்க கூறினார். அவரும் அடகு வைத்து அதற்கான பணத்தை ரவீந்திரபாபுவிடம் தந்தார்.

இந்தநிலையில் அடகு நகையை மீட்க தேவையான பணத்தை சீதாலட்சுமியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் நகைகளை திருப்பி கொடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைதொடர்ந்து ரவீந்திரபாபு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் சீதாலட்சுமி மீது நகை மோசடி செய்ததாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்